தீராத சந்தேகம்.. 'இன்னைக்கு' தான் உனக்கு 'கடைசி' நாள்.. எச்சரித்த மனைவியை.. கொன்ற கணவன்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Oct 15, 2019 01:09 PM

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் என்ற பகுதியை சேர்ந்த ராஜு, நீலம் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ராஜு வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சொந்தமான வீடொன்றில் நீலம் தன்னுடைய குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். அப்போது அந்த வீட்டை விற்கப்போவதாக நீலத்தின் மாமியார் தெரிவித்துள்ளார். இதற்கு நீலம் மறுக்க மாமியார்-மருமகள் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

Man kills wife after being allegedly ‘threatened’ by her in UP

அந்த நேரம் ராஜு வெளிநாட்டில் இருந்து வந்துள்ளார். இருவருக்கும் இடையில் கடந்த 8-ம் தேதி இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. சண்டையில் இதுதான் உனக்கு கடைசிநாள் என நீலம், ராஜூவை எச்சரிக்கை செய்துள்ளார். இதனால் அடியாட்கள் வைத்து தன்னை கொன்று விடுவாளோ? என்று பயந்த ராஜு மனைவி நீலத்தை அடித்துக் கொலை செய்துள்ளார்.

அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து தகவல் அளிக்க போலீசார் ராஜூவைக் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி நீலத்துக்கு வேறு யாருடனோ தொடர்பு இருப்பதாக ராஜுவுக்கு இருந்த சந்தேகமும் இந்த கொலை சம்பவத்துக்கு தூண்டுகோலாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.