'திருடறது' முக்கியமில்லை 'பாஸ்'... அடி வாங்காம திருடறது தான் 'முக்கியம்'... திருடர்களின் 'ஐன்ஸ்டீன்' மூளையில் உதித்த 'கிரேட் ஐடியா'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Feb 20, 2020 05:46 PM

லால்குடி அருகே திருடுவதற்கு வசதியாக சினிமா பாணியில் பக்கத்து வீடுகளின் கதவை பூட்டிவிட்டு திருடிய சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

The thieves locked the door of the neighboring houses

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்துள்ள குமுளூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். 50 வயதான முருகன் கடந்த ஞாயிற்றுக் கிழமை துறையூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இதையறிந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். இதற்காக திருடர்கள் கையாண்ட விதம்தான் சினிமா காட்சியை  மிஞ்சும் வகையில் உள்ளது.

ஒரு வீட்டில் திருடும் போது, மற்ற வீட்டில் இருந்து யாரும் வந்து பார்த்துவிட்டால், சிக்கலாகிவிடும் என்பதால், பக்கத்தில் உள்ள அனைத்து வீடுகளின் கதவுக்கும் வெளிப்புறமாக பூட்டை போட்டு பூட்டியுள்ளனர்.

அதன்பின்னர் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 15 சவரன் நகை, 75 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழ்கள், ஆடைகள் என அனைத்தையும்  திருடிச் சென்றுள்ளனர். போகிற போக்கில் பக்கத்து வீட்டில் நின்ற சைக்கிளையும் எடுத்துச் சென்றுள்ளனர். காலையில் எழுந்த பின்னர் தான் அனைவருக்கு நூதன திருட்டு குறித்து தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #TRICHY #THIEVES #NEIGHBORING #LOCKED DOOR