‘விபத்தின்போது சம்பவ இடத்தில் இருந்த கமல்?’.. ‘கட்சியின் 3வது வருட விழாவில்’.. மநீம ட்வீட்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்லைகா புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், கமலின் நடிப்பில், அனிருத் இசையில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பின் போது, நேற்றிரவு கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் உதவி இயக்குநர் உட்பட 3 பேர் பலியாகிய சம்பவம் தமிழகத்தை அதிரவைத்தது.
இந்நிலையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்த நடிகர் கமல்ஹாசன் உயிரிழந்தவர்களின் இழப்பை தன் குடும்பத்தின் இழப்பாகக் கருதுவதாகக் கூறி, 1 கோடி ரூபாய் நிதி உதவி அறிவித்ததோடு, ‘விழுந்த கிரேன் இரண்டு அடி தள்ளி விழுந்திருந்தால் தனக்கு பதிலாக வேறு ஒரு ஆள் பேசிக்கொண்டிருந்திருக்க கூடும்’ என்று பேசியுள்ளார்.
இந்த நிலையில்,‘நாளை (21/02/2020) அன்று நடைபெறும் நமது கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க நிகழ்வுகளில் நமது தலைவர் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்கள் கலந்துகொள்வதாக இருந்த நிகழ்ச்சிகள்
நாளை (21/02/2020) அன்று நடைபெறும் நமது கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க நிகழ்வுகளில் நமது தலைவர் நம்மவர் திரு @ikamalhaasan அவர்கள் கலந்துகொள்வதாக இருந்த நிகழ்ச்சிகள் மட்டும் ரத்து செய்யப்படுகிறது. - @drmahendran_r #MakkalNeedhiMaiam pic.twitter.com/9YmC18EMPQ
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) February 20, 2020
மட்டும் ரத்து செய்யப்படுகிறது’ என்று மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.