‘பாதி எரிந்த நிலையில் இளம்பெண் சடலம்’!.. ‘அருகில் கிடந்த மண்ணெண்ணெய் கேன், கம்மல்’.. திருச்சி அருகே பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 17, 2019 06:52 PM

விராலிமலை அருகே சாலையோரம் பாதி எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Unidentified woman\'s burnt body found in Trichy

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கலிங்கி பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் இன்று காலை தனது தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக பாதி எரிந்த நிலையில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் சடலம் கிடந்ததை பார்த்துள்ளார். உடனே இதுகுறித்து அவர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் சடலத்துக்கு அருகே மண்ணெண்ணெய் கேன், பாதி எரிந்த நிலையில் கிடந்த செருப்பு மற்றும் கம்மல் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எப்போதும் வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #MURDER #WOMAN #TRICHY