‘விஷம் குடித்த 11-ம் வகுப்பு மாணவி’... ‘பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி’... 'கதறி புலம்பும் பெற்றோர்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 05, 2019 12:49 PM

திருச்சி அருகே 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் எடுத்துள்ள விபரீத முடிவு பெற்றோருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

15 year old student committed suicide due to pregnancy

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வசித்து வந்த அபிராமி என்ற சிறுமி, அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 23-ம் தேதி, வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவர் மயங்கி விழுந்த நிலையில் கிடக்க, பெற்றோர் பதறியடித்துக் கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு மாணவி 6 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். அதனைக் கேட்டு மாணவியின் பெற்றோர் அதிர்ந்து போயினர்.

இந்நிலையில் மாணவியின் உயிரை காப்பாற்ற வேண்டுமெனில், அவரது வயிற்றில் உள்ள சிசுவை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதற்கு அந்த மாணவியின் பெற்றோரும் சம்மதம் கூறினர். இதையடுத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 6 மாத சிசு அகற்றப்பட்டது. எனினும் உடல்நிலை மோசமடைந்து மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Tags : #SUICIDE #TRICHY #STUDENT