'சினிமா பாத்து கத்துக்கிட்டோம்'.. 'வாட்ஸ்-ஆப் குரூப் வெச்சிருக்கோம்'.. 'அதிர வைத்த கோவை திருடர்கள்!'
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Dec 15, 2019 11:22 PM
கோவையில் உள்ள கருமத்தம்பட்டி, அன்னூர், சத்திய மங்கலம் மற்றும் ஈரோடு, பவானி உள்ளிட்ட பகுதிகளில் டிப்ளமோ படித்துவிட்டு தொடர் செயின் பறிப்பு, வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சரண் உள்ளிட்ட 5 இளைஞர்களை காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமயிலான காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களை விசாரித்ததில், அவர்கள் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு வேலையும் கிடைக்காமல், வருமானத்துக்கும் வழியின்றி சுற்றிக் கொண்டிருந்தபோது, திரைப்படங்களைப் பார்த்து நுணுக்கங்களுடன் எப்படி திருடுவது, செயின் பறிப்பது, வழிப்பறி செய்வது உள்ளிட்டவற்றை அக்கு அக்காக கற்றுக்கொண்டதாகக் கூறி அதிரவைத்துள்ளனர்.
இதேபோல், கணியூர் சுங்கச்சாவடியருகே நகை, பணம் திருடிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 2 பேர், வழிப்பறியில் இருந்து தப்பிப்பதற்காக உயர் ரக இருசக்கர வாகனங்களை திருடியதாகவும், திருடிய பணத்தை காதலிகளுக்கு செலவு செய்வதாகவும், மேலும் இதற்கென தனி வாட்ஸ்-ஆப் குழு ஒன்றை உருவாக்கி திருட்டு பற்றி திட்டங்கள் முதலான தகவல்களை பகிர்ந்துகொண்டு திருடுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
