'நான் அவரோட தீவிர பக்தன்'...'தினமும் பாலாபிஷேகம்'...'பிரதமர் மோடி'க்கு கோவில் கட்டிய விவசாயி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Dec 25, 2019 01:49 PM

பிரதமர் மோடிக்கு விவசாயி ஒருவர் கோவில் கட்டி, தினமும் வழிபாடு செய்து பலரையும் ஆச்சரியப்பட செய்துள்ளார்.

Trichy Farmer build New Temple for Prime Minister Modi

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள எரகுடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். விவசாயம் செய்து வரும் இவருக்கு, திருமணமாகி பானுமதி என்ற மனைவியும் தீபா என்ற மகளும், சதீஷ்குமார், சூர்யா ஆகிய 2 மகன்களும் உள்ளனர். விவசாயி சங்கர் சிறு வயது முதலே பிரதமர் நரேந்திரமோடியின் மீது கொண்ட ஈர்ப்பால் அவரது தீவிர ரசிகராக மாறி போனார். ஒரு கட்டத்தில் தனது செலவில் மோடிக்கு கோவில் கட்ட வேண்டும் என்ற ஆசை அவருக்கு தோன்றியது.

விவசாயம் செய்து வரும் சங்கருக்கு அதில் போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் அவரால் கோவில் கட்ட முடியாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பெய்த மழையால் விவசாயத்தில் நல்ல விளைச்சல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோவில் கட்ட தொடங்கிய சங்கர் தற்போது அந்த பணிகளை முடித்து விட்டார். கட்சியின்  மூத்த தலைவர்களை கொண்டு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பதே சங்கரின் லட்சியமாக உள்ளது.

இதனிடையே தினமும் மோடியின் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பித்து வழிபாடு நடத்தி வரும் சங்கர், கட்சியையும் தாண்டி பிரதமர் மோடி ஒரு நல்ல மனிதர். அவர் கொள்கையால் ஈர்க்கப்பட்டு இந்த கோவிலை கட்டி உள்ளேன் என கூறியுள்ளார்.

Tags : #BJP #NARENDRAMODI #FARMER #TEMPLE #TRICHY #PRIME MINISTER