'100 டி-சர்ட்டுகளை' மறைத்து எடுத்துச் செல்ல 'முயன்ற'... 'திருடர் குல திலகம்'... 'அதிர்ந்து' போன 'மேற்பார்வையாளர்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Mar 13, 2020 12:11 PM

திருப்பூர் பனியன் நிறுவனம் ஒன்றில் உடல் முழுவதும் 100 டி-சர்ட்டுகளை மறைத்து எடுத்துச் சென்றவரை பாதுகாவலர்கள் கையும் களவுமாக பிடித்தனர்.

The thief who tried to hide 100 T-shirts all over the body

திருப்பூர் பனியன் நிறுவனம் ஒன்றில் பணிக்கு செல்லும் போது மெலிந்த தேகத்துடன் சென்ற தொழிலாளர் ஒருவர், பணிமுடிந்து வீடு திரும்பும் போது அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் போல தடிமனாக வெளியே வந்தார். இதனைக் கண்டு சந்தேகமடைந்த சூப்ரவைசர் அவரது மேல் சட்டையை கழற்ற சொன்னார். ஆனால் அந்த பணியாளர் சட்டையை கழற்ற மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து காவலாளியை அழைத்து அவரை மிரட்டிய பிறகு அவர் ஒன்றன் பின் ஒன்றாக டி-சர்ட்டுகளை கழற்ற ஆரம்பித்தார். முடிவில் 10 டீசர்ட்கள் அவர் அணிந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, உப்பிப் போயிருந்த பேண்டை கழற்ற கூறினர். அதில் பண்டல் பண்டலாக டி-சர்ட்டுகளை கட்டி பதுக்கி வைத்திருந்தார். ஒரு பண்டலில் 20 டி.சர்ட்டுகள் என 5 பண்டல்களை பதுக்கியிருந்தார்.

இதனைக் கண்டு அதிர்ந்து போன சூப்பர்வைசர் மூன்றே நிமிடங்களில் உடைக்குள் மறைத்து வைத்திருந்த அத்தனை டி- சர்ட்டுகளையும் கைப்பற்றி அவரை சிறப்பாக கவனித்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இந்தத் திருட்டுச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #THIRUPPUR #THIEF #100 T-SHIRTS #HIDE BODY