‘கல்யாணத்துக்கு இன்னும் 4 நாள்தான் இருக்கு’! மணல் கடத்தலை தடுக்க சென்ற காவலருக்கு நேர்ந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 26, 2019 04:12 PM

மணல் கடத்தலை தடுக்க சென்ற காவல் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Nadu police dies in road accident near Vellore

வேலூர் மாவட்டம் குடுயாத்தம் அடுத்த ஏரியான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (29). இவர் வேலூர் மாவட்ட மணல் கடத்தல் தடுப்பு பிரிவில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். ஒரு வருடத்துக்கு முன்பு தந்தை இறந்துவிட, தாயும் மின்சாரம் தாக்கி இறந்துள்ளார். இதனால் அண்ணன்களின் அரவணைப்பில் ராஜீவ் காந்தி இருந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு பெண் பார்த்து நிச்சயம் செய்துள்ளனர். வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், அழைப்பிதழ் அடித்து உறவினர் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 17ம் தேதி இரவு மணல் கடத்தலை தடுக்க சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் ராஜீவ் காந்தி உட்பட சில காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக சாலையில் எதிரே வந்த சிலிண்டர் லாரி போலீஸ் வாகனத்தின் மீது மோதியுள்ளது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, காவலர்கள் ராஜீவ் காந்தி, சுரேஷ் ஆகியோர் பலத்த காயமடைந்துள்ளனர். இதனை அடுத்து மூவரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் ராஜீவ் காந்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரந்தார். திருமணத்துக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் காவலர் உயிரிழந்த சம்பவம், சக காவலர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.