VIDEO: ‘டிராஃபிக்கை கண்ட்ரோல் செய்தபோது’... ‘நொடியில்’... 'நடுரோட்டில் காவலருக்கு நேர்ந்த சோகம்'... ‘பதறவைத்த சிசிடிவி காட்சிகள்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | Nov 25, 2019 06:57 PM
போக்குவரத்தை சரிசெய்தபோது, தனியார் பேருந்து கண் இமைக்கும் நேரத்தில், காவலர் மீது மோதிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா முதல்வர் மனோகர் லால் அவசரமாக காரில் செல்வதையொட்டி, கடந்த சனிக்கிழமையன்று இரவு, சண்டிகர் மாநிலம் காளி பரி லைட் பாயிண்ட் என்ற இடத்தில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு கொள்ளப்பட்டு இருந்தது. அப்போது, ஆலன் கோச்சிங் மையத்தை சேர்ந்த பேருந்து ஒன்று போக்குவரத்தின்போது, வளைந்து திரும்ப முயன்றது. அப்போது, நடுரோட்டில் இருந்த கான்ஸ்டபிள் குல்தீப் சிங் மீது, வேகமாக மோதியது. பேருந்து மோதிய வேகத்தில் சிறிது தூரம் அந்த கான்ஸ்டபிள் தூக்கி வீசப்பட்டார்.
இதையடுத்து தனியார் பேருந்து சட்டென நின்றது. உடனடியாக அங்கிருந்தவர்கள் ஓடிவந்து, காவலரை மருத்துவமனைக்கு வாகனம் ஒன்றில் அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அதன்பின்னர், தனியார் பேருந்து பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலரின் உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
