‘கர்ப்பப்பை இல்லை’.. ‘50 திருநங்கைகளிடம் விசாரணை’.. சென்னை ஏரியில் பெண் சடலம் மிதந்த வழக்கில் புதிய திருப்பம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Nov 24, 2019 02:55 PM
பெரும்பாக்கம் ஏரியில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட வழக்கு தொடர்பாக 50 திருநங்கைகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சென்னை பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம் ஏரியில் கடந்த 21ம் தேதி பெண் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனை அடுத்து பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உடல் அழுகிய நிலையில் இருந்ததால் பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் மீட்கப்பட்ட உடலில் கர்ப்பப்பை இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனால் அவர் திருநங்கையாக இருக்கலாம் என மருத்துவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து 50 திருநங்கைகளிடம் அவரின் புகைப்படத்தை காண்பித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். உடல் கண்டெடுக்கப்பட்டு மூன்று நாட்களாகியும் யாரென கண்டுபிடிக்க முடியாத நிலையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.