அசுர வேகத்தில்.. 'ராயல் என்பீல்ட்' பைக் மீது மோதிய... பிஎம்டபிள்யூ கார்.. 'நொடியில்' இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Nov 25, 2019 05:40 PM

குடிபோதையில் பிஎம்டபிள்யூ காரை ஓட்டிவந்த டிரைவர் ராயல் என்பீல்ட் பைக் மீது மோதியதில், பைக்கை ஓட்டிவந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியாகினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

BMW car rams into Royal Enfield, kills 26 year old biker

ஹைதாராபாத் பகுதியில் உள்ள கான்மெட் ஜங்சன் என்னும் பகுதியில் நேற்றிரவு(ஞாயிற்றுக்கிழமை) பிஎம்டபிள்யூ கார் ஒன்றை அஸ்வின் ராவ் என்னும் நபர் ஓட்டிவந்தார். குடிபோதையில் காரை ஓட்டிவந்த அஸ்வின் அதே நேரத்தில் ஜோடியாக வந்த ஆனந்த்-லிசா சவுத்ரியின் ராயல் என்பீல்ட் பைக்கில் மோதி இருக்கிறார்.

இதில் சம்பவ இடத்திலேயே ஆனந்த் பலியாக லிசா தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த விபத்தில் ராயல் என்பீல்ட் பைக் அடையாளம் தெரியாமல் உருக்குலைந்து போனது. இதேபோல காரும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. தற்போது குடிபோதையில் காரை ஓட்டிவந்த குற்றத்திற்காக அஸ்வினை போலீசார் கைது செய்து, விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #ACCIDENT