'தனியா வரும் பெண்கள் தான் டார்கெட்'...'ஸ்டார் ஹோட்டல்ல நடந்த கொடுமை'...பெங்களூரை அதிரவைத்த தமிழக இளைஞர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Nov 25, 2019 11:38 AM

தான் எம்.எல்.ஏ மகன் என கூறி பல இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த தமிழக இளைஞரை பெங்களூரு காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.

Bengaluru: MBA Graduate Arrested for Luring Woman Into Sexual Favors

சமீபத்தில் பெங்களூரு காவல்நிலையத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரில் '' கர்நாடகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ மகன் கார்த்திக் ரெட்டி என்பவர் தன்னை நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக'' கூறியிருந்தார்.

மேலும் சில வழக்குகள் இதுபோன்று தொடர்ந்து பதிவானது. அதில் எல்லாம் கார்த்திக் ரெட்டி மற்றும் கிரண் ரெட்டி என்பவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அனைத்து புகார்களிலும் எம்.எல்.ஏ மகன் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து தீவிர விசாரணையில் இறங்கிய காவல்துறையினர், இளம் பெண்கள் அனைவரும் ஏமாந்தது ஒரே ஒரு தவறான நபரிடம் தான் என்பது தெரியவந்தது.

பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்த புகைப்படங்களை கொண்டு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இளம்பெண்களை ஏமாற்றிய கார்த்திக் ரெட்டி என்கிற ஜஹாங்கீரை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த நபர் குறித்து தோண்ட தோண்ட பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து பேசிய பெங்களூரு காவல்துறையினர், ''திருச்சியை பூர்விகமாக கொண்ட இவருக்கு ஸ்ரீரங்கம்தான் சொந்த ஊர். எம்.பி.ஏ பட்டதாரியான இவருடைய உண்மையான பெயர் ஜஹாங்கீர்.

ஷாப்பிங் மால்களுக்கு செல்லும் இவர் நல்ல டிப் டாப்பாக உடை அணிந்து கொண்டு, ஏதேனும் காபி ஷாப்பில் அமர்ந்து கொண்டிருப்பார். அப்போது தனியாக வரும் இளம்பெண்களிடம், தன்னை கார்த்திக் ரெட்டி அல்லது கிரண் ரெட்டி என அறிமுகபடுத்தி கொள்வார்.  நான் எம்.எல்.ஏ-வின் மகன் அம்மா மருத்துவராக இருக்கிறார் என பெண்களை நம்ப வைப்பார். இதனால் இவர் நல்ல  சமூக அந்தஸ்தை உடையவர் என்பதை நம்பும் இளம்பெண்கள், அவரிடம் சகஜமாக பழகியுள்ளார்கள்.

அதைத்தொடர்ந்து நான் நகைக்கடை வைத்துள்ளேன். பிசினஸ் செய்கிறேன் எனக் கூறி நம்பவைத்துள்ளார். எப்போதும் தமிழக பதிவெண் கொண்ட காரில் வலம் வரும் ஜஹாங்கீர், வேலை தேடும் பெண்களை சந்தித்தால் அவர்களை தன்னுடைய நிறுவனத்தில் பணி தருவதாக கூறி, காரில் அழைத்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு அழைத்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அங்கு சென்ற உடன் அவர்களுடைய கிரெடிட் கார்டிலே ஹோட்டலில் அறை எடுத்து தங்கி, அங்கு அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மாடலிங் துறையில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். சினிமாவில் நடிக்க வைக்கிறேன்' என பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து இளம்பெண்களை ஏமாற்றி பணம், நகைகளை கறந்துள்ளார். இதனிடையே ஜஹாங்கீர் பயன்படுத்திய தமிழக பதிவெண் கொண்ட காரை வைத்து அவரை பிடித்துள்ள காவல்துறையினர், அவரிடம் இருந்து ஏராளமான செல்போன்கள், இளம்பெண்களை ஏமாற்றி வாங்கிய் விலையுயர்ந்த பொருள்களை பறிமுதல் செய்துள்ளார்கள்.

கடந்த  2017-ம் ஆண்டில் இருந்து இதுபோன்ற செயலில் அவர் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆசை வார்த்தைகளை கூறி பெண்களை ஏமாற்றி அவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, பணத்தையும் கறந்த தமிழக இளைஞரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #BENGALURU #POLICE #SEXUALABUSE #MBA GRADUATE #TRICKING