'பள்ளிக்கு போகாம ஏமாற்றிய மாணவிகள்'...'பிளான் போட்டு தூக்கிய டிரைவர்கள்'...சென்னையில் நடந்த அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Nov 25, 2019 10:23 AM

பள்ளிக்கு போகாமல் ஏமாற்றிய மாணவிகளை ஆட்டோ டிரைவர்கள், திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Auto Drivers Arrested for Sexually Harassing Female School Students

சென்னை கண்ணகிநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியொன்றில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மூன்று பேரும் தோழிகள். இவர்கள் தேர்வில் குறைவான மதிப்பெண்களை எடுத்ததால் ஆசிரியர் கண்டித்துள்ளார். அதோடு பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வராமல் வகுப்பிற்கு வரக்கூடாது என கூறியுள்ளார். இதனால் மாணவிகள் மூவருக்கும் என்ன செய்வது என தெரியவில்லை.

இதனிடையே றுநாள் பள்ளிக்கு புறப்பட்ட மூன்று பேரும், வகுப்பில் ஆசிரியர் கூறிய எதையும் பெற்றோரிடம் கூறாமல், பள்ளி சீருடையை அணிந்து கொண்டு பள்ளிக்கு செல்லமால் அந்த பகுதியில் சுற்றி திரிந்துள்ளார்கள். இந்நிலையில் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்களாக இருக்கும் கனகராஜ் மற்றும் விஜயக்குமார் ஆகிய இருவரும் மாணவிகள் மூவரையும் கண்காணித்துள்ளார்கள். அப்போது மாணவிகளிடம் சென்று நைசாக பேச்சு கொடுத்த இருவரிடமும் மாணவிகள் மூவாறும் சகஜமாக பேசியுள்ளார்கள்.

இதையடுத்து 'பக்கத்தில் ஒரு பீச் இருக்கு நல்ல இருக்கும் போகலாம்' என மாணவிகளை அருகில் இருந்த அக்கரை கடற்கரை ஆட்டோ ஓட்டுனர்கள் இருவரும் அழைத்து சென்றுள்ளார்கள். அங்கு கடற்கரையில் நன்றாக விளையாடிய மாணவிகள் மூவரும் பள்ளி முடியும் நேரத்தில் வீட்டிற்கு சென்றுள்ளார்கள். இதனைத்தொடர்ந்து மறுநாளும் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்ட மாணவிகள் மூவரும், ஆட்டோ ஓட்டுநர்கள் இருவருடனும் தியேட்டருக்கு சென்றுவிட்டு பள்ளி விடும் நேரத்திற்கு வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.

இதற்கிடையே இரண்டு நாட்களாக பள்ளிக்கு செல்லவில்லை, அதை வீட்டிலும் சொல்லவில்லை, இதுகுறித்து ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தெரிந்தால் என்னவாகும் என மாணவிகள் அச்சமடைந்துள்ளார்கள். இதனை அறிந்த ஆட்டோ ஓட்டுனர்கள் இருவரும், நாம் எங்கேயாவது வெளியூர் சென்றுவிடலாம், அங்கு சென்று திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக இருக்கலாம் என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்கள். இதனை நம்பிய அவர்கள், மறுநாள் 3 மாணவிகளில் 2 பேர் அவர்களுடன் சென்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து பள்ளிக்கு சென்ற மாணவிகள் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோர், கண்ணகி நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்கள். இதனைத்தொடர்ந்து சென்னையின் அனைத்து காவல்நிலையங்களையும் அலர்ட் செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணையை மேற்கொண்டார்கள். முதலில் பள்ளிக்கு செல்லாமல் அவர்களுடன் சுற்றித் திரிந்த மற்றொரு மாணவியிடம் விசாரிக்க அவர் அனைத்து உண்மைகளையும் கூறினார்.

அதைத்தொடர்ந்து துரைப்பாக்கம் பகுதியில் மாணவிகள் இருவரும் ஆட்டோவில் ஏறிச் செல்லும் சிசிடிவி காட்சிகளை வைத்து உறுதிப்படுத்திய போலீசார், ஆட்டோ ஓட்டுநர்கள் கனகராஜ் மற்றும் விஜயக்குமார் ஆகிய இருவரது செல்போன் சிக்னலை வைத்து பின் தொடர்ந்தனர். சென்னையில் இருந்து மாணவிகளை கும்பகோணம் அழைத்துச் சென்ற இருவரும் கோயிலில் வைத்து தாலி கட்டி அங்கிருந்து திருப்பூர் அழைத்து சென்றுள்ளனர். இதனை உறுதி செய்த காவல்துறையினர், திருப்பூர் விரைந்து அங்கு விடுதியொன்றில் தங்கியிருந்த சிறுமிகளை மீட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் இருவரையும் கைது செய்தனர்.

காரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 25 வயதான கனகராஜ் ஏற்கனவே திருமணமானவன், 19 வயதான விஜயக்குமார் பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவன். மாணவிகள் இருவரிடம் திருமண ஆசை காட்டிய அவர்கள், அவர்களை பாலியல் பலாத்காரமும் செய்துள்ளனர். இதையடுத்து இருவர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இருவரையும் சிறையில் அடைத்தனர்.

எது சரி, எது தவறு என முடிவு செய்ய முடியாத வயதில் இருக்கும் 14 வயதே ஆன இரு சிறுமிகளும், வசமாக சென்று இருவரிடமும் சிக்கியுள்ளார்கள். பள்ளிக்கு செல்லும் தம் பிள்ளைகள் வீட்டில் இருந்து புறப்பட்டு பள்ளிக்கு தான் செல்கிறார்களா என்பதை கூட கவனிக்காத பெற்றோரும், பள்ளிக்கு வரவில்லையென்றால் பெற்றோரிடம் விசாரிக்க வேண்டும் என்று அக்கறை கட்டாத பள்ளி நிர்வாகமும் தான் இது போன்ற செயல்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறார்கள் என, காவல்துறையினர் வேதனையுடன் கூறியுள்ளார்கள்.

Tags : #TAMILNADUPOLICE #SEXUALABUSE #SCHOOLSTUDENT #STUDENTS #AUTO DRIVERS #CHENNAI #ARRESTED