'தூங்கிட்டு இருந்தேன்.. மேல ஏதோ ஊத்தினா'.. 'கண் முழிச்சு பாத்தா'.. சந்தேகக் காதலி.. நெஞ்சை உலுக்கும் மரண வாக்குமூலம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 24, 2019 11:26 PM

தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலராக பணிபுரிந்து வந்த சென்னை ஆவடியில் உள்ள திருமுல்லைவாயலைச் சேர்ந்த வெங்கடேசன், கருத்து வேறுபாடு காரணமாக மனைவி ஜெயாவிடம் விவாகரத்துக்கு அப்பீல் செய்துள்ளார். அவ்வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த தம்பதியருக்கு 4 வயது மகள் இருக்கிறாள். அவள் தனது தந்தையுடன் வசித்து வந்தார். 

woman sets police man on fire for his illegal relationship

இதனிடையே, தனது நண்பர் காவலர் ஜோதிராமலிங்கம் என்பவருடைய மனைவி ஆஷா என்கிற பெண்ணை காதலித்ததோடு, அவருடன் கடந்த 4 வருடங்களாக காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார் வெங்கடேசன். இந்த நிலையில்தான், அவர் தீ விபத்தில் சிக்கியுள்ளதாக வந்த தகவலின் பேரில், உடனடியாக அங்கு காவல்துறையினர்  சென்றபோது, அவர் 70% தீக்காயத்துடன் இருந்துள்ளார்.

உடனே அவரை மீட்ட காவல்துறையினர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பிறகு ஆஷாவிடம் விசாரணை நடத்தியபோதுதான், வெங்கடேசனுக்கு ஆஷாவையும் தாண்டி வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக ஆஷாவுக்கு சந்தேகம் எழுந்ததாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த ஆஷா தன்னைத் தவிர வேறு யாருடனும் பேசக்கூடாது என்று எச்சரித்துள்ளார். 

ஆனால் அடுத்தடுத்து இருவருக்கும் இடையே தகராறு எழுந்துள்ளது. மேலும் அவருடைய செல்போன் அழைப்புகளையும் ஆஷா சோதனை செய்து வந்துள்ளார்.இந்த நிலையில்தான், நண்பர் வீட்டுக்கு சென்றுவிட்டு இரவு தாமதமாக வந்த வெங்கடேசனிடம், ‘உனக்கு லீவுதானே? 12 மணி வரைக்கும் எங்க போயிட்டு வந்த?’ என்று கேட்டு தகராறு செய்துள்ளார். 

அதன் பிறகு தூங்கிக் கொண்டிருக்கும்போது தன் மீது பெட்ரோல் ஊற்றி ஆஷா கொளுத்தியதாகவும், தீக்காயத்துடன் எழுந்து ஓடிவந்ததாகவும் வெங்கடேசன் மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார். 

Tags : #POLICE #GIRLFRIEND #LOVE