டிக் டாக்கில்.. விலைமாதர்களாக 'சித்தரிக்கப்பட்ட' இளம்பெண்கள்.. 'வாழ்க்கையை' தொலைத்த பரிதாபம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manjula | Nov 25, 2019 11:52 AM
டிக் டாக்கில் விலைமாதர்களாக சித்தரிக்கப்பட்ட இளம்பெண்கள் வாழ்க்கையை இழந்த பரிதாபம் மதுரையில் நிகழ்ந்துள்ளது.
மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும், தல்லாகுளம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் டிக் டாக் மூலம் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகினர். திருமணமான இருவரும் டிக் டாக் செயலிக்கு அடிமை ஆனதால் தங்களது கணவர்களை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்த இருவருக்கும் தேனியை சேர்ந்த சுகந்தி(26) என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. சுகந்தி அவருடைய நண்பர் செல்வம் (27) என்பவருடன் சேர்ந்து டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு வந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக சுகந்தியுடனான டிக் டாக் நட்பை மேற்கண்ட இரு பெண்களும் துண்டித்து கொண்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த சுகந்தி இருவரது டிக் டாக் வீடியோக்களையும் டவுன்லோடு செய்து அவர்களை விலைமாதர்களாக சித்தரித்து வீடியோ வெளியிட்டு விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர்.புகாரைத்தொடர்ந்து செல்வம், சுகந்தி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
ஆனால் போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க அவர்கள் இருவரும் எச்சரிக்கையாக முன்ஜாமீன் பெற்று விட்டனர். இதனால் தற்போது சுகந்தியிடம் இருந்த செல்போன்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.