குழப்பத்தில் ‘சென்னை’ கொள்ளையன் செய்த ‘வேறலெவல்’ காமெடி.. போலீஸ் வருவதற்குள் ‘தப்பியோட்டம்!’...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Dec 16, 2019 07:23 PM

சென்னையில் ஏடிஎம் இயந்திரம் என நினைத்து குழப்பத்தில் பாஸ்புக் இயந்திரத்தை உடைத்துக் கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Chennai Thief Breaks Passbook Printing Machine Instead Of ATM

சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக வங்கியின் மும்பை கட்டுப்பாட்டு அறையிலிருந்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அந்த மர்ம நபர் தப்பிச் சென்றுள்ளார். மேலும் அங்கிருந்த 3 இயந்திரங்களில் 2 ஏடிஎம் இயந்திரங்கள் அப்படியே இருக்க, பாஸ்புக் பிரிண்ட் செய்யும் இயந்திரம் மட்டும் உடைக்கப்பட்டிருந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான கொள்ளையனின் புகைப்படத்தை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #ROBBERY #SBI #ATM #CCTV #CHENNAI #POLICE