‘வெடித்து சிதறிய குழாய்’.. வெள்ளம்போல் ஹோட்டலுக்குள் புகுந்த வெந்நீர்.. 5 பேர் பலியான பரிதாபம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்யாவில் உள்ள ஹோட்டல் ஒன்றின் வெந்நீர் குழாய் உடைந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ரஷ்யா நாட்டின் பேர்ம் (Perm) என்ற நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றின் அடித்தளத்தில் கேரமெல் (Hotel Caramel) என்ற சிறிய ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் அமைக்கப்பட்டிருந்த சுடுதண்ணீர் குழாய் எதிர்பாராத விதமாக வெடித்து சிறியுள்ளது. இதனால் ஹோட்டல் அறைக்குள் வெள்ளம்போல வெந்நீர் குபுகுபுவென நுழைந்துள்ளது.
இதில் ஹோட்டலுக்குள் இருந்த 5 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
