‘58 பயணிகளுடன்’ கிளம்பிய ‘பேருந்து’... சுற்றுலாவின்போது ‘நொடிப்பொழுதில்’ நடந்த ‘பயங்கர’ விபத்து...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Jan 20, 2020 02:40 PM

இந்தோனேசியாவில் சுற்றுலா பயணிகள் சென்ற பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

Indonesia Accident 8 Dead 30 Injured In Bus Crash

இந்தோனேசியாவின் ஜாவா மாகாணத்தில் அமைந்துள்ள டாங்குபன் பெராகு எரிமலையைப் பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். நேற்று முன்தினம் அங்கு 58 சுற்றுலா பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றுள்ளது. அந்தப் பேருந்து வளைவான சாலையில் போய்க்கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிக் கவிழ்ந்துள்ளது.

இந்த கோர விபத்தில் 8 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் 30 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Tags : #ACCIDENT #INDONESIA #BUS #TOURIST #CRASH