‘8 பேருடன்’ சென்ற கார்... ‘அதிவேகத்தில்’ எதிரே வந்த லாரி... பனிப்பொழிவால் ‘நொடிகளில்’ நடந்த ‘கோர’ விபத்து...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jan 21, 2020 07:30 AM

ராஜஸ்தானில் லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Accident 7 Killed As SUV Rams Into Truck In Rajasthans Churu

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்துள்ளது. அதில் 8 பேர் பயணம் செய்த நிலையில், கார் நமா என்ற கிராமத்தைக் கடந்தபோது எதிரே வந்த லாரி ஒன்றின்மீது அதிவேகத்தில் மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த 7 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

தககவலறிந்து விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அதிக பனிப்பொழிவு காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடுபத்தினருக்கு அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

Tags : #ACCIDENT #RAJASTHAN #CHURU