VIDEO :'ஃபைன்' போடல, 'PUNISHMENT' குடுக்கல... ஆனா ஒரே 'கேள்வி' தான்!!... 'ஆடிப்' போன 'மாணவர்கள்'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிவகங்கை மாவட்டத்தில் வாகன சோதனை மேற்கொண்ட போது, சிறுவர்கள் இரண்டு பேர் உரிய ஆவணங்கள் இல்லாமல் போலீசாரிடம் சிக்கிக் கொண்டனர்.
அப்போது, அவர்களிடம் அபராதம் எதுவும் விதிக்காத காவல்துறையினர், அவர்களிடம் சில கேள்விகளை கேட்கலாம் என முடிவு செய்து தமிழில் உயிர் எழுத்துக்கள் எத்தனை என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு சிறுவர்கள் இரண்டு பேரும் திருதிருவென முழித்த நிலையில், ஆயுத எழுத்துக்கள் எத்தனை என்று போலீஸ் அதிகாரி கேட்டார். அதற்கு ஒரு சிறுவன் 'மற்றொரு சிறுவனிடம் கேளுங்க' என கூறிய நிலையில், அந்த சிறுவன் சொன்ன பதிலோ தூக்கி வாரிப் போட்டது.
தமிழில் மொத்தம் 268 ஆயுத எழுத்துக்கள் என்ற சிறுவனின் பதிலால் அங்கிருந்த போலீசார் திகைத்துப் போயினர். தொடர்ந்து அவர்களிடம் உயிர் எழுத்துக்களை கூற வைத்து, ஆயுத எழுத்து குறித்தும், உயிர்கள் எழுத்துக்கள் குறித்தும் போலீசார் விளக்கமளித்த நிலையில், சிறுவர்கள் பைக் ஓட்டக்கூடாது எனக்கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வெளியாகி அதிகம் வைரலாகி வருகிறது.