'500' ரூபாய்க்கு போலி 'ஆதார்'... 'அட்ராசிட்டி' செய்யும் 'பிரவுசிங்' சென்டர்...6 மாசம் 'அலைஞ்சு' வாங்குன 'கார்டு'... 5 நிமிஷத்துல 'ரெடி'யாகும் 'அதிசயம்'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்மைக்ரோ ஃபைனான்ஸ் மூலம் கடன் பெறுவதற்காக ஒரு கணினி மையத்தில் 500 ரூபாய்க்கு போலி ஆதார் கார்டுகள் தயாரிக்கப்பட்டு தருவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆதார் அட்டை என்பது இந்திய தனிநபர் அடையாள ஆணையத்தின் 12 இலக்க எண்களைக் கொண்ட அடையாள அட்டையாகும். இதில் சம்பந்தப்பட்ட நபரின் பெயருடன், அவரது கைவிரல் ரேகைகள், கண் கருவிழி போன்ற விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். இப்படிப் பல்வேறு விதிகளைக்கொண்ட ஆதார் அட்டைக்கு உச்ச நீதிமன்றம் பல அம்சங்களை வகுத்துள்ளது.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் ஆதார் அட்டையைப் போலியாகத் தயார் செய்து சில தனியார் நிறுவனங்கள் லோன் கொடுப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஏற்கெனவே பல இடங்களில் கடன் பெற்றிருந்தால் மீண்டும் கடன் பெற இயலாது என்பதால் புதிதாக ஆதார் கார்டுகளை போலியாக தயாரிக்கின்றனர் இவர்கள்.
இதற்காக தனியார் பிரவுசிங் சென்டர்களில் குறிப்பிட்ட நபர்களின் ஆதார் எண்ணில் அவர்களது குழந்தைகளின் ஆதார் எண்ணை மாற்றிக் கொடுக்கின்றனர். ஆதார் கார்டை ஸ்கேன் செய்து இந்த தில்லுமுல்லு வேலைகளை இவர்கள் செய்கின்றனர். ஒரு அட்டைக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரையில் வசூலிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் சர்வசாதாரணமாக இந்த மோசடி நடக்கிறது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
