‘உயிர் போகும் நிலையிலும்... காதலுக்காக இந்த கடைசி முத்தங்கள்!’.. ‘வாட்ஸ் ஆப்பில் வீடியோ வெளியிட்டு’ இளம் பெண் செய்த ‘பதைபதைப்பு’ காரியம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காரைக்குடி அருகே வாட்ஸ்அப் காதலன் பேச மறுத்ததால் பெண் ஒருவர் வீடியோ வெளியிட்ட படி தற்கொலை செய்து கொண்டார்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் ராஜேஸ்வரி தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பர்மா காலனியில் தனி வீடு எடுத்து தங்கியிருந்தார்.
இதனிடையே ராஜேஸ்வரிக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரபுதேவா என்பவருக்கும் வாட்ஸ் ஆப் மூலமாக காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் திருமணம் செய்து கொள்ளாமல் பிரபுதேவாவுடன் வாழ்ந்துவந்த ராஜேஸ்வரி தன்னை திருமணம் செய்துகொள்ள சொல்லி பிரபுதேவாவை வற்புறுத்தியதால் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு அவர் தலைமறைவானதாக தெரிகிறது.
பிரபுதேவாவை தொடர்பு கொள்ள இயலாததால் ஏமாற்றமடைந்த ராஜேஸ்வரி வாட்ஸ் ஆப் வீடியோவில் தூக்கிட்டு கொள்வது போல் பதிவிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் கடைசியாக தனது காதலனுக்கு மூன்று முத்தங்கள் அளித்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.
இதனையடுத்து ராஜேஸ்வரியின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் காரைக்குடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வாட்ஸ் ஆப் காதலன் பிரபுதேவாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
