‘4 அடி உயர முள்படுக்கை’!.. ‘தவம் செய்த பெண் சாமியார்’.. அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jan 06, 2020 02:05 PM

சிவகங்கை அருகே பெண் சாமியார் ஒருவர் முள் படுக்கையில் தவம் செய்து அருள் வாக்கு வழங்கினார்.

Woman lying down top of thorns at Muthumariamman temple in Sivagangai

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள லாடனேந்தல் பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நாகராணி அம்மையார் முள்படுக்கையில் அமர்ந்து தவம் செய்யும் வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி உடைமுள், கற்றாழை உள்ளிட்ட பல்வேறு வகையான முட்கள் மூலம் சுமார் 4 அடி உயரத்துக்கு முள்படுக்கை அமைகப்பட்டுள்ளது.

முள்படுக்கை மீது சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீர்த்தம் தெளித்த பின்னர், அதில் நாகராணி அம்மையார் அம்மையார் தவம் செய்துள்ளனர். இதனை அடுத்து கோயிலுக்கு வந்த பக்தர்களின் திருமண வரம், குழந்தை பாக்கியம், வேலையின்மை போக்குதல் உள்ளிட்டவைக்கு அருள் வாக்கு வழங்கியுள்ளார்.

Tags : #SIVAGANGAI #TEMPLE #WOMAN #THORNS