சிகிச்சையில் இருந்த 'கடைசி' நபரும் 'டிஸ்சார்ஜ்'... தமிழகத்தில் கொரோனா 'இல்லாத' மாவட்டமாக மாறியுள்ள '4வது' மாவட்டம்!...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிகிச்சை பெற்று வந்த கடைசி நபரும் குணமடைந்ததை தொடர்ந்து கோவை கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 146 பேரில் உயிரிழந்த ஒருவரைத் தவிர மற்றவர்கள் படிப்படியாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இஎஸ்ஐ மருத்துவமனையில் கடைசியாக கொரோனா பாதிப்புடன் கர்ப்பிணி ஒருவர் மட்டும் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
கடந்த வாரம் அவருக்கு குழந்தை பிறந்த நிலையில், குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பெண் கொரோனாவில் இருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளார். இதன்முலம் ஈரோடு, சிவகங்கை, திருப்பூர் மாவட்டங்களை அடுத்து கோவையும் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.
