தமிழகத்தில் 4 வயது ‘சிறுமிக்கு’ கொரோனா தொற்று.. உறவினர்களுக்கு ‘தீவிர’ பரிசோதனை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சிவகங்கையில் 4 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தியும், வைரஸ் அறிகுறி இருந்தால் அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 1173 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் 4 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள பள்ளிவாசல் தகரம் வைத்து சீல் வைக்கப்பட்டு, அந்த பகுதி முழுவதும் தடுப்புகள் வைத்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் சிறுமியின் உறவினர்களுக்கு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
