‘நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம்’.. ‘இளைஞர் எடுத்த விபரீத முடிவு’.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Sep 10, 2019 05:13 PM

தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கு வேறொருத்தருடன் திருமணம்  நடந்ததால் இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: 21 year old youth who jumped from building in Gujarat

குஜராத் மாநிலம் பலான்புர் பகுதியை சேர்ந்தவர் ராகுல் வால்மீகி (21). இவருக்கு அப்பகுதியில் உள்ள பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்பெண் ராகுலை பிடிக்கவில்லை எனக் கூறியுள்ளார். இதனால் பெண் வீட்டார் வேறு ஒருவருக்கு தங்களது பெண்ணை மணமுடித்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த போன ராகுல் தற்கொலை செய்ய முடிவெடுத்து அடுக்குமாடி குடியிருப்பின் மேல் ஏறியுள்ளார்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் ராகுலிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் ராகுல் திடீரென மாடியில் இருந்து குதித்துள்ளார். அப்போது போலீசார் கீழே போர்வையை விரித்து வைத்திருந்ததால் சிறிய அடிகளுடன் ராகுல் உயிர்தப்பினார். இதனை அடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். நியூஸ் 18 ஹிந்தி பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags : #GUJARAT #YOUTH #JUMPS #BUILDING #POLICE #SUICIDEATTEMPT