இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Sep 18, 2019 11:44 AM

1. பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் தி.மு.க அறக்கட்டளை சார்பில் சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

Tamil News important Headlines read here for more September 18

2. மோடிக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்ததால், பாஜக ஆதரவாளர் என தன்மீது முத்திரை குத்தப்படுவதாக மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் நடிகர் ரஜினிகாந்த் வேதனை தெரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

3. இந்தி திணிப்பு குறித்து பேசியுள்ள நடிகர் ரஜினிகாந்த், “எந்தவொரு நாட்டுக்கும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது. ஆனால் துரதிருஷ்டவசமாக நம் நாட்டில் பொது மொழியைக் கொண்டுவர முடியாது. இந்தி மொழியை திணித்தால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென் இந்தியாவிலும் சரி, வட இந்தியாவிலும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” எனக் கூறியுள்ளார்.

4. நல்லவர் போல நடித்த ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதன் மூலம் காங்கிரஸ் ஊழலின் ஊற்றுக்கண்ணாக திகழ்வது தெரியவந்துள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் இன்னும் சில நாட்களில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் கைதாவார். அவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராக கூட இருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

5. சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

6. ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனசாக வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

7. அழைப்பை ஏற்று ஆளுநர் மாளிகை சென்றுள்ள தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்துள்ளார்

8. நிதிமுறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட கர்நாடகா காங்கிரஸைச் சேர்ந்த டி.கே.சிவக்குமாரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

9. நாடு முழுவதும் இ-சிகரெட் என அழைக்கப்படும் எலெக்ட்ரானிக் சிகரெட்களுக்கு தடைவிதிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

10. தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

11. திருச்சி கல்லக்குடி அருகே கழிப்பறையிலிருந்து பிறந்து 2 மணி நேரமே ஆன ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. தொப்புள் கொடியுடன் கிடந்த குழந்தையை மீட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள் திருச்சி அரசு மருத்துவமனை தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைத்துள்ளனர்.

12. தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 4 எம்.பி.க்களின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில் தேர்தல் கமிஷன் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

13. ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதிதான். அதை ஒரு நாள் பிடித்தே தீருவோம் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியுடன் கூறியுள்ளார்.

14. ஆப்கானிஸ்தான் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நிகழந்த தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் 30 பேர் பலியாகியுள்ளனர். அதிபர் தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

15. இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டி மொகாலியில் இன்று நடைபெறுகிறது.

Tags : #TAMILNADU #INDIA #STALIN #BANNERKILLEDSUBASHRI #RAJINIKANTH #HRAJA #TRICHY #INFANTBABY #PMMODI