காலாண்டு விடுமுறை இல்லையா..? உண்மை என்ன..? எதிர்பார்ப்பில் மாணவர்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Sep 16, 2019 12:43 PM
தமிழக அரசு பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை இல்லை என வெளியான தகவல் உண்மை இல்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் காலாண்டு தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து வரும் 23 -ம் முதல் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை தொடங்க உள்ளது. இந்நிலையலில் சமுத்திர சிக்ஸா அபியான் அமைப்பு மகாத்மா காந்தியின் 150 -வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாக, வரும் 23 -ம் தேதி முதல் அக்டோபர் 2 -ம் தேதி வரை நிகழ்ச்சிகள் நடத்த சுற்றரிக்கை வெளியிட்டது. காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நாள்களில் இந்த அறிவிப்பு வந்ததால் விடுமுறை கிடையாது என வதந்தி பரவத் தொடங்கியது.
இந்நிலையில் காலாண்டு விடுமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் அரசு பள்ளிகளுக்கு அளிக்கப்படும் விடுமுறைகளை ரத்து செய்வது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை மட்டுமே முடிவெடுக்கும் என கூறப்பட்டுள்ளது. காந்திய சிந்தனை நிகழ்ச்சிகளை விருப்பமுள்ள பள்ளிகள் நடத்தலாம் எனவும், அதில் விருப்பமுள்ள மாணவர்கள் கலந்துகொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. காலாண்டு விடுமுறை ரத்து என்பது தவறான தகவல் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.