‘அவரப் பத்தி எனக்கு தெரியாது’... ‘ஆனா இவங்க ரெண்டு பேரும்’... 'அமைச்சர் தடாலடி பதில்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 13, 2019 10:23 PM

நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித்குமார் மற்றும் விஜய் போன்றவர்கள் அரசியல் வாழ்க்கை குறித்து அமைச்சர் பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.

minister rajendra balaji says will support rajinikanth and ajith

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், அ.தி.மு.க நிர்வாகியின் இல்லப் புதுமனை புகுவிழா நடைப்பெற்றது. இதில் கலந்துகொண்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலஜி, நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, `சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. விதிகளை மீறி பேனர் வைப்பவர்கள்மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். ஒரு சில அ.தி.மு.க நிர்வாகிகள், ஆர்வத்தால் பேனர் வைப்பது, அரசுக்கு கெட்டப் பெயரை உண்டாக்குகிறது. தற்போதைய அ.தி.மு.க ஆட்சியில்தான், சாலை வசதி உள்ளிட்ட, உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் சரியாக உள்ளன.

குறைக் கண்டுப்பிடித்து கூறிகொண்டே இருப்பவர்களை திருப்திபடுத்த முடியாது. தமிழகத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதைத் தடுப்பதுதான் ஸ்டாலினின் குறிக்கோளாக உள்ளது’ என்று தெரிவித்தார். மேலும், ‘தமிழகத்தில், நல்லவர்கள் யார் கட்சி ஆரம்பித்தாலும், அதை ஆதரிப்போம். நடிகர் விஜய்யைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் அஜித்குமார் போன்ற நல்ல நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால், அவர்களை ஆதரிப்போம்' என்று கூறியுள்ளார்.

Tags : #TAMILNADU #MINISTER #RAJENDRABALAJI