அம்மாடியோவ்! பொங்கலுக்கு இம்புட்டு நாள் லீவா?.. விவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Sep 11, 2019 09:12 PM

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஒருநாள் வந்துபோகும் தீபாவளியை விட, ஒருவாரம் கொண்டாடி மகிழும் பொங்கலுக்கு மவுசு அதிகம்.

Pongal2020: Tamil Nadu employees maybe get 9 days holiday

சொந்தபந்தம்,சொந்த ஊரைப் பிரிந்து நகரங்களின் மாயையில் தொலைந்து போகும் ஒவ்வொருவருக்கும், பொங்கல் விடுமுறை ஆக்சிஜனைப் போன்றது. மூன்று முதல் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை, கிராமத்து வாசம், உற்றார்-உறவினர்களை சந்தித்தல், நண்பர்களுடன் நேரடி சாட்டிங் என ஒவ்வொருவரும் அந்த ஒருவாரமும் குழந்தைகள் போன்ற மனநிலையுடன் தான் திகழ்வர்.

போகி,பொங்கல்-கரும்பு,ஜல்லிக்கட்டு,விளையாட்டுப் போட்டிகள்  என ஆண்டு முழுவதுமே அந்த நாட்கள் மனதில் பதிந்து மகிழ்ச்சியை அளிக்கும்.இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த பொங்கலுக்கு எக்ஸ்ட்ரா கொஞ்சம் விடுமுறை கிடைத்தால் எப்படி இருக்கும். நினைக்கும்போதே சிறுபிள்ளை போல மனம் துள்ளிக்குதிக்கிறதா?

ஆமாம். இந்த பொங்கலுக்கு சுமார் 9 நாட்கள் வரை அரசு விடுமுறை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வரும் 2020ல், ஜனவரி 11-ம் தேதி சனிக்கிழமை, 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. இந்த இரண்டு நாட்களும் அரசு விடுமுறை நாட்கள். 13-ம் தேதி திங்கள் கிழமை வேலை நாள், 14-ம் தேதி செவ்வாய்க்கிழமை போகி பண்டிகை, 15-ம் தேதி புதன் கிழமை பொங்கல், 16ஆம் தேதி வியாழக்கிழமை திருவள்ளுவர் நாள், 17-ம் தேதி வெள்ளிக்கிழமை உழவர் தினம். அதாவது தொடர்ந்து செவ்வாய்க்கிழமையில் இருந்து விடுமுறை வருகிறது.

தொடர்ந்து வரும் 18-ம் தேதி சனிக்கிழமை,19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என அடுத்த 2 நாட்களும் விடுமுறை நாட்களே. இதனால் தொடர்ந்து 9 நாட்கள் மொத்தமாக விடுமுறை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இடையில் வேலை நாளாக இருக்கும் திங்கள் கிழமை மட்டும் விடுமுறை கிடைத்தால், மொத்தம் 9 நாட்கள் பொங்கலைக்  கொண்டாடி மகிழலாம்.13-ம் தேதியை விடுமுறை தினமாக முதல்வர் அறிவித்தால், தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை அரசு ஊழியர்கள்,மாணவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கடந்த பொங்கலுக்கு தமிழக முதல்வர் 6 நாட்கள் அரசு விடுமுறை அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #HOLIDAY #TAMILNADU #PONGAL