‘கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் எடுத்த சோக முடிவு!’.. ‘விசாரணையில்’ வெளிச்சத்துக்கு வந்த ‘திடுக்’ உண்மைகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலம் மாவட்டம், வீரகனூர் அருகே உள்ள கிழக்கு ராஜபாளையத்தை சேர்ந்தவர் மனோகரன். திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவருக்கும் கிழக்கு ராஜபாளையத்தை சேர்ந்த 32 வயதான லதா என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆகிய நிலையில் குழந்தை இல்லாத இந்த தம்பதிக்கு இடையில் அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக, லதா தனது தாய் வீட்டிற்கு சென்று வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 7-ஆம் தேதி லதா தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் லதாவின் உறவினர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து லதாவின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு லதாவின் மரணத்தை சந்தேக வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணையில்தான் கெங்கவல்லி அருகே உள்ள சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பரமசிவம் என்பவர் லதாவுடன் பழகி வந்தது தெரியவந்தது. கணவரை பிரிந்து லதா தன் வீட்டருகே உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சென்று வந்தபோது லதா, பரமசிவத்தின் ஆட்டோவில் வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போதுதான் இருவருக்கும் இடையே நட்பு உண்டாகியுள்ளது. இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருவரும் பல இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்து வந்துள்ளனர்.
இதனை பரமசிவத்தின் மனைவி ராதிகாவின் உறவினர் ஒருவர் பார்த்துவிட்டு ராதிகாவிடம் கூற, ராதிகா தனது குடும்பத்தினருடன் லதாவின் வீட்டிற்கு சென்று அவரை தற்கொலைக்கு தூண்டும் வகையில் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த லதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிகிறது.
இவ்வழக்கில் ராதிகா உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு, லதாவின் கள்ளக்காதலர் பரமசிவம் மற்றும் ராதிகாவின் தரப்பினரான ரமேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே தலைமறைவாக உள்ள பரமசிவத்தின் மனைவி ராதிகா உள்ளிட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
