'ராகுல் டிராவிட்ட பாலோ பண்ணுங்க' ... 'கொரோனால இருந்து விலகி இருங்க' ... கிரிக்கெட் ரசிகரின் மாஸ்டர் பிளான்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா வைரசிலிருந்து தப்பிக்க கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் ஸ்டைலை பின்பற்ற வேண்டும் என்ற ரசிகர் ஒருவரின் ட்விட்டர் பதிவு இணையவாசிகளை கவர்ந்து வருகிறது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகத்தின் மிகுதியான நாடுகளில் பரவி வருகிறது. சீனாவில் தற்போது இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று மூலம் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் சுமார் 130 பேர் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர், இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டின் ஸ்டைல்களை ட்விட்டரில் பதிவிட்டு இதை பின்பற்றினாலே கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க கொள்ளலாம் என பதிவிட்டுள்ளார். கைகளை கழுவுதல், ஒருவருடன் இடைவெளி விட்டு நிற்பது உட்பட பல கொரோனா வைரஸ் விழிப்புணர்வினை கிரிக்கெட் விளையாடும் ஸ்டைலை வைத்தே ஏற்படுத்தியதால் அதனை கிரிக்கெட் ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
How to fight Coronavirus: Lessons from Rahul Dravid. (A thread) pic.twitter.com/UYfWUTs4FO
— Sagar (@sagarcasm) March 16, 2020
