'புதுமாப்பிள்ளையை துடிக்கவிட்டு கொன்ற மச்சான்'...'இதான் காரணமா'...ஒரு நிமிஷம் ஆடிப்போன போலீசார்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Mar 06, 2020 05:14 PM

இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில், புதுமாப்பிள்ளை கொடூரமான கொல்லப்பட்ட சம்பவத்தில், மாப்பிள்ளையின் தங்கை கணவர் அளித்துள்ள வாக்குமூலம் போலீசாரையே அதிர்ச்சியில் உறைய வைத்துவிட்டது. இந்த காரணத்திற்காகவா ஒரு உயிர்ப் பலியாகிவிட்டது எனப் பலரது நெஞ்சும் ஒரு நிமிடம் நின்று தான் போகும்.

Tenkasi : Groom killed by Brother in Law a day before wedding

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தென்மலை பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் முனீஸ்வரன் என்ற முனியப்பன். பொக்லைன் இயக்குநராக இருக்கும் இவருக்கும் விருதுநகர் மாவட்டம் கிரு‌‌ஷ்ணன் கோவில் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அதன்படி இருவருக்கும் இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதனால் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அனைத்து சொந்த பந்தங்களும் முனீஸ்வரன் வீட்டிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வந்து விட்டார்கள்.

அதேபோன்று திருமணத்தில் கலந்து கொள்வதற்காக, மதுரை மாவட்டம் உத்தப்பபுரம் பகுதியில் உள்ள முனீஸ்வரனின் தங்கை முனீஸ்வரி, அவரது கணவர் வீரசங்கிலி முருகன் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மலைக்கு வந்தனர். திருமண மகிழ்ச்சி களைகட்டியிருந்த நிலையில்,  நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டில் அனைவரும் தூங்கச் சென்றனர். புதுமாப்பிள்ளை முனீஸ்வரன் தனி அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த அறைக்குத் தங்கையின் கணவர் வீரசங்கிலி முருகன் சென்றார். அங்கு உறங்கிக் கொண்டு இருந்த முனீஸ்வரனின் கழுத்தைக் கொடூரமாகக் கத்தியால் அறுத்து, துடிக்கத் துடிக்க கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்று விட்டார். திருமண வீடு ஒரே இரவில் இறந்த வீடாக மாறியது. வீடு முழுவதும் அழுகை சத்தம் கேட்டது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முனீஸ்வரனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய முனீஸ்வரனின் தங்கை கணவர் வீரசங்கிலியை அதிரடியாகக் கைது செய்தனர். அப்போது தான் எதற்காக முனீஸ்வரனை கொலை செய்தேன் என்பது குறித்து அதிரவைக்கும் வாக்குமூலம் ஒன்றை அளித்தார். அதில் '' முனீஸ்வரன் திருமணத்தில் கலந்து கொள்ள வந்த இடத்தில், எனக்கும் முனீஸ்வரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான், எனது மனைவியை அடித்தேன்.

இதுகுறித்து அறிந்த முனீஸ்வரன், எப்படி எங்கள் வீட்டில் வைத்து எனது தங்கையை அடிக்கலாம் என, தங்கை கணவர் என்று பாராமல் பலர் முன்னிலையில் என்னை அடித்தார். இது எனக்குப் பெரிய அவமானமாகப் போனது. அதேபோன்று முனீஸ்வரனுக்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சியிலும், திருமணத்திற்கும் எனக்கு முறையாகச் சுருள் வைத்து அழைக்கவில்லை.

இதிலும் அவர் மீது நான் ஆத்திரத்தில் இருந்து வந்தேன். அந்த ஆத்திரத்தில் முனீஸ்வரனை கொலை செய்ய முடிவு செய்து, தனி அறையில் தூங்கிக் கொண்டிருந்த அவரை துடிக்கத் துடிக்க கொலை செய்தேன்'' என வாக்குமூலம் அளித்துள்ளார். இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், ஆத்திரத்தில் எடுத்த முடிவால் முனீஸ்வரனின் உயிர் அநியாயமாகப் போனதோடு, ஒரு குடும்பமே தற்போது நிலைகுலைந்து போயிருப்பது தான் சோகத்தின் உச்சம்.

Tags : #MURDER #KILLED #TENKASI #GROOM #BROTHER IN LAW #புதுமாப்பிள்ளை #தென்காசி