கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ‘கிருமிநாசினி’.. கண்டுபிடித்து அசத்திய கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மாணவர்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கொரோனா வைரஸைக் கட்டுபடுத்தும் கிருமி நாசினையை கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க முறையான கிருமி நாசினியை பயன்படுத்துவதால் தப்பிக்க முடியும் என உலக சுகாதர அமைப்பு தெரிவித்தது. இதனால் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு கிருமி நாசினிகளை வாங்கி வருவதால், அதற்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கிருமி நாசினி ஒன்றை தயாரித்துள்ளனர்.
மருத்துவக்கல்லூரி முதல்வர் வசந்தாமணி தலைமையில் மருந்தியல் துறை மாணவர்கள் கண்டுபிடித்த இந்த கிருமி நாசினி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டிதலின் அடிப்படையில் இந்த கிருமிநாசினி உருவாக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்த கிருமி நாசினி உருவாக்க மொத்தம் 100 ரூபாய்தான் செலவானதாகவும், பற்றாக்குறை காரணமாக வெளிச்சந்தையில் இதே கிருமி நாசினி 300 முதல் 500 ரூபாய் விற்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க உதவும் கிருமி நாசினி கலன்களை பதுக்கி கூடுதல் விலைக்கும் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
