‘தாய்’ ஓட்டிய கார் ‘திடீரென’ கட்டுப்பாட்டை இழந்ததால்... 6 மாத ‘குழந்தை’ உட்பட ‘3 பேருக்கு’ நிகழ்ந்த சோகம்... ‘பதறவைக்கும்’ சம்பவம்...
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பையில் கார் ஒன்று தடுப்புச்சுவர் மீது மோதிய கோர விபத்தில் 6 மாத குழந்தை மற்றும் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

மும்பை அந்தேரி பகுதியைச் சேர்ந்த பாவனா (55) என்பவர் அவருடைய மகள் நமிகா (30), 6 மாத குழந்தையான பேத்தி நிஷிகா மற்றும் உறவினர் ஜூயு குருநானி (52) ஆகியோருடன் காரில் வெளியே சென்றுள்ளார். பின்னர் அவர்கள் அந்தேரி திரும்பியபோது காரை நமிகா ஓட்டிவந்த நிலையில், ஹாஜி அலி ரோடு அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி முழுவதுமாக நொறுங்கியதில், அதில் இருந்த குழந்தை உட்பட அனைவரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஒர்லி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரில் சிக்கியிருந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில் பாவனா, ஜூயு குருநானி மற்றும் குழந்தை நிஷிகா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில், காரை ஓட்டி வந்த நமிகா படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
