‘ஆட்டோ ஓட்டியபோது திடீரென வந்த நெஞ்சுவலி’... 'டிரைவருக்கு நேர்ந்த சோகம்'... ‘தாம்பரம் அருகே நடந்த பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 14, 2020 02:58 PM

சென்னை தாம்பரம் அருகே நெஞ்சுவலி காரணமாக ஓடும் ஆட்டோவில் இருந்து சாலையில் விழுந்து ஓட்டுநர் உயிரிழந்தார். இதனால் சில அடி தூரத்துக்கு ஆட்டோ மட்டும் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Man died in Cardiac arrest while driving the Auto in Chennai

கொரட்டூரில் இருந்து மதுரவாயல் நோக்கி ஆவின் சாலையில் ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ் என்பவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால், ஆட்டோவிலிருந்து சாலையில் விழுந்து அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஆட்டோ ஓட்டுநர் இல்லாததால், ஓடிக்கொண்டிருந்த ஆட்டோ சிறிது தூரம் சென்று தடுப்பில் மோதி நின்றது.

இதனைப் பார்த்த அங்கிருந்த மக்கள் உடனடியக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார். பிரகாஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சாலையில் நடமாட்டம் குறைவாக இருந்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Credits: Polimer

Tags : #ACCIDENT #CHENNAI #TAMBARAM #DRIVER #AUTO #CARDIAC ARREST