‘நாமக்கல் அருகே கோரவிபத்து’.. நள்ளிரவு லாரி மீது ‘நேருக்குநேர்’ மோதிய டாடா சுமோ.. 6 பேர் உடல் நசுங்கி பலி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 14, 2020 08:27 AM

நாமக்கல் அருகே லாரியும் காரும் நேருக்குநேர் மோதிய விபத்தில் 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

TaTa Sumo and Lorry on collision six killed near Namakkal

நாமக்கலில் இருந்து திருச்சிக்கு நேற்றிரவு செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. அதே சமயத்தில் திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி டாடா சுமோ ஒன்று வந்துள்ளது. நள்ளிரவு 11 மணியளவில் சின்னவேப்பநத்தம் அருகே கார் வந்துகொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த 6 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். டாடா சுமோவில் பயணம் செய்த 2 பேரில் நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடியை சேர்ந்தவர்கள் என்பது அவர்களது டிரைவிங் லைசென்ஸை வைத்து போலீசார் கண்டறிந்துள்ளனர். மற்ற 4 பேர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் திருச்சியில் கட்டிட வேலையில் ஈடுப்பட்ட வந்ததும் தெரியவந்துள்ளது.

Tags : #ACCIDENT #KILLED #NAMAKKAL #LORRY #CAR