‘திடீரென இடிந்து பூமிக்குள் புதைந்த கட்டிடம்’.. சென்னை மெட்ரோ ‘சுரங்கப்பாதை’ பணியில் நடந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியின்போது அருகில் இருந்த கட்டிடம் ஒன்று பூமிக்கும் உள்வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் வரையிலான வழிதடத்தில் மெட்ரோ சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை அருகே இன்று காலை மெட்ரோ சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்றது. அதில் ராட்சத கிரேன் மூலம் பள்ளம் தோண்டு பணி நடந்தது.
அப்போது சுரங்கப்பாதைக்கு அருகில் உள்ள லோகநாதன் என்பவருக்கு சொந்தமான கட்டிடம் திடீரென இடிந்து பூமிக்குள் உள்வாங்கியது. அந்த கட்டிடத்தில் இருந்த டீக்கடை ஊழியர்கள் உடனடியாக வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கையின்றி மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் குடியிருப்புகளில் விரிசல் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
