‘பாய்ஸ் உங்க உடம்ப ரெடி பண்ணுங்க’.. நிஜ 'தீரன்' தொடங்கி வைத்த புதிய முயற்சி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 18, 2019 10:45 AM

‘பாய்ஸ் உங்க உடம்ப ரெடி பண்ணுங்க’.. நிஜ 'தீரன்' தொடங்கி வைத்த புதிய முயற்சி!

Real Life Theeran SR Jangid inaugurates a wing for Martial a

சுமார் 9 வருடங்களுக்கு மேலாக, தமிழ்நாடு உட்பட, இந்தியா முழுவதும், அனைவரையும் அச்சுறுத்திய பல கொலை கொள்ளை குற்றங்களை செய்து வந்ததாக பவாரியா கொள்ளை கும்பலை சிரமப்பட்டு பிடித்தவர் எஸ்.ஆர்.ஜாங்கிட். இவரின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதே கார்த்தி நடிப்பில் வெளிவந்த தீரன் திரைப்படம்.

இவர், அனைத்திந்திய மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட் அமைப்பின் அங்கிகாரம் பெற்ற தமிழ்நாடு மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட்ஸ் சங்கத்தின் துவக்க விழா மற்றும் பொறுப்பாளர் நியமன நிகழ்ச்சியில், "தற்காப்புக்கலை சங்கம்"

ஒன்றை தொடங்கி வைத்தார். சென்னை கீழ்ப்பாக்கதில் உள்ள ஓய்.எம் சி.ஏ. அரங்கில் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் டி.ஜி.பி. எஸ்.ஆர். ஜாங்கிட்.ஐ.பி.எஸ் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றிவைத்தார்.

இதில் பேசிய எஸ்.ஆர். ஜாங்கிட்,  பல வீரர்கள் தமிழ்நாட்டில் இருந்து உருவாகி வருவதாகவு, எம்.எம்.ஏ போன்ற வீர விளையாட்டு மூலம் இளைய சமுதாயத்திற்கு தன்னம்பிக்கையும் திடகாத்திரமான மனோபலமும் அதிகரிக்கும் என்றும் மாநில, தேசிய, சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்த நினைப்போருக்கு இந்த சங்கம் நல்ல வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

Tags : #SR JANGID #THEERAN #MARTIAL ARTS #CHENNAI