‘திடீரென அபார்ட்மெண்டுக்குள் நுழைந்த’.. ‘மர்ம நபர் செய்த நடுங்க வைக்கும் காரியம்’.. ‘சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Sep 17, 2019 02:19 PM

சென்னையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து ரகளை செய்த நபர் விசாரணை மேற்கொண்ட காவலரின் கை விரலை கடித்து துண்டாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Man bites off police constables finger arrested

சென்னை தியாகராய நகரில் உள்ள ராஜாத்தி அபார்ட்மெண்டில் நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணியளவில் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளை கற்களை போட்டு உடைத்துள்ளார். சத்தம் கேட்டு அங்கு வந்த காவலாளி கோவிந்த் அவரைப் பிடிக்க முயற்சித்துள்ளார். ஆனால் அந்த மர்ம நபர் கைகளில் இருந்த கற்களால் அவரையும் தாக்க முயற்சித்ததோடு, கட்டையால் வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து உடைத்துள்ளார்.

இதைப் பார்த்த குடியிருப்புவாசிகள் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து தலைமை காவலர் சுந்தரமூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த மர்ம நபரிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் சுந்தரமூர்த்தியின் கையை திடீரென கடித்துக் குதறியுள்ளார். இதில் அவருடைய வலது கை நடுவிரல் பாதியில் துண்டானதாக கூறப்படுகிறது.

இதையடுத்து காயமடைந்த காவலர் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர் அந்த மர்ம நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் அசாம் மாநிலம் அமலாபுரியைச் சேர்ந்த பல்வாதூர் (40) என்பது தெரியவந்துள்ளது. மனைவி இறந்ததும் வேலை தேடி சென்னை வந்த அவர் வேலை கிடைக்காத விரக்தியில் சைக்கோ மனநிலைக்கு தள்ளப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Tags : #CHENNAI #APARTMENT #PSYCHO #MAN #POLICE #FINGER