"தோனியின் சாதனையை முறியடிக்கும் கோலி!"... "25 ரன்கள் மட்டும் தேவை!!"...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manishankar | Jan 28, 2020 06:39 PM

டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய கேப்டன் என்ற தோனியின் சாதனையை முறியடிப்பதற்கு, தற்போதைய கேப்டன் கோலிக்கு 25 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

25 runs needed to break dhoni\'s record for virat kohli

சர்வதேச 20 ஓவர் போட்டிகளில், அதிக ரன்கள் குவித்த இந்திய அணியின் கேப்டன்கள் பட்டியலில், தோனி முதலிடத்தில் இருந்து வருகிறார். ஆனால், தற்போதைய இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் கோலி, தனக்கும் தன் அணிக்கும் ரன்களை வாரிக்குவித்து வருவதால், டி20 போட்டிகளில் தோனியின் சாதனையை முறியடிக்க 25 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது.

டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்த தோனி 1112 ரன்களை குவித்துள்ளார். கோலி தற்போது கேப்டனாக 1088 ரன்களைப் பதிவு செய்துள்ளார். இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த மூன்று போட்டிகளில் அவர் 25 ரன்கள் எடுத்து தோனியை மிஞ்சுவார் என கணிக்கப்படுகிறது.

சர்வதேச அளவில் டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த கேப்டன் என்ற வகையில், முதல் இடத்தில் 1273 ரன்களுடன் தென்னாப்பிரிக்க வீரர் டு பிளஸிஸும், இரண்டாவது இடத்தில் 1148 ரன்களுடன் நியூசிலாந்து அணியின் தற்போதைய கேப்டன் வில்லியம்சனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #MSDHONI #VIRATKOHLI #CRICKET #T20