‘கோயிலில்’... ‘திருமணம் செய்த காதல் ஜோடிக்கு’... ‘சில மணி நேரத்திலேயே’... ‘பெண் வீட்டாரால் நிகழ்ந்த பரிதாபம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 24, 2020 12:33 PM

ஈரோட்டில் திருமணம் நடைபெற்ற சில மணி நேரத்திலேயே கணவர் கண்முன்னே மனைவியை கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Husband lodged complaint against bride family, wife abducted

ஈரோடு ஓலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மெய்யப்பன். இவரும், சரளை சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியான ஜீவிதாவும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பெற்றோரின் சம்மதம் கிடைக்காததால், வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி கோயிலில் திருமணம் செய்துக்கொண்டனர்.

தகவல் அறிந்து வந்த பெண் வீட்டார், புதுமணத் தம்பதிகள் என்றும் பாராமல், இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் தங்கள் மகளான ஜீவிதாவை கடத்தி சென்றதாகத் தெரிகிறது. திருமணம்ன சில மணிநேரத்திலேயே காதல் மனைவி பெற்றோரால் கடத்தப்பட்டதால், அதிர்ச்சியடைந்த கணவர் மெய்யப்பன் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும் கடத்தி செல்லப்பட்ட தனது மனைவியை மீட்டுத் தருமாறு போலீசாரிடம் கேட்டுக் கொண்டார். சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் செய்துகொண்டதால், கோபமடைந்த பெற்றோர், இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாக மெய்யப்பன் வேதனை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #BRIDE #GROOM #MARRIAGE #WEDDING