சம்பளத்தை உயர்த்திய பிரபல நிறுவனம்...! 'நிறைய கம்பெனியில வேலைய விட்டே தூக்கிட்டு இருக்காங்க...' இங்க மட்டும் எப்படி...?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | May 18, 2020 06:04 PM

கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த இக்கட்டான சூழலில் ஒரு சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை பாதியாக குறைத்தும், ஒரு சில நிறுவனங்கள் அதற்கு மேலே சென்று குறிப்பிட்ட சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

Asian Paint Company raised its employees\' salaries

ஆனால் இந்தியாவின் மிகச்சிறந்த பெயிண்ட் நிறுவனங்களில் ஒன்றான ஏசியன் பெயிண்ட் தனது ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இதற்கு காரணம் என்னவென்றால், கொரோனா வைரஸ் பரவும் இந்த சூழலில் மக்களுக்கு அதிகமாக தேவைப்படுவது சானிடைசர். எனவே இந்நிறுவனம் தற்போது சானிடைசர் உற்பத்தி செய்து வருகிறது. மேலும் இதுவரை சுமார் 35 கோடி மதிப்பிலான கொரோனா நிவாரண பணிகளையும் இந்நிறுவனம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

எகனாமிக் டைம்ஸ் இதழுக்கு பேட்டியளித்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அமித் சைங்கிள், மற்ற நிறுவனங்களைப் பார்த்து தங்கள் ஊழியர்கள் எவ்வித அச்சமும் படாமல் இருக்கவும், அவர்களுக்கு மன தைரியத்தை தரும் வகையில் அவர்களின் ஊதியத்தை உயர்த்தியுள்ளோம். மேலும் பங்குதாரர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டும் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags : #SALARY