'டேய் நீ பண்றது பெரிய தப்பு'... 'அது என்னோட தம்பி மனைவி'... 'ஆத்திரத்தில் இளைஞர் செய்த பாதகம்'... சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | May 16, 2020 11:45 AM

முறை தவறிய உறவைக் கண்டித்த அத்தையை இளைஞர் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Man Allegedly Stabs Aunt To Death After Argument

சென்னையை அடுத்த புழல் விநாயகபுரம் பரிமளம் நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி குணசுந்தரி. இவருடைய தம்பி லோகு. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனிடையே குணசுந்தரியின் அண்ணன் மகனான கணேசன் என்ற இளைஞரும் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவருக்குத் திருமணமான நிலையில், கருத்து வேறுபாடு காரணமாகக் கணேசனின் மனைவி, அவரை விவாகரத்து செய்துவிட்டு தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

இந்தநிலையில் ஒரே பகுதியில் வசித்து வந்த கணேசனுக்கும், சித்தி முறையான லோகுவின் மனைவிக்கும் தகாத உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் கடந்த 5 மாதங்களாகத் தனிமையில் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் குணசுந்தரிக்குத் தெரியவர, தனது தம்பி மனைவியுடன், தனது அண்ணன் மகன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளதை அறிந்து அதிர்ந்து போனார். இந்த விவகாரம் தொடர்பாகக்  கணேசனைப் பலமுறை அவர் கண்டித்த நிலையிலும், கணேசன் கண்டுகொள்ளவில்லை.

இதற்கிடையே குணசுந்தரி, நேற்று கணேசன் வீட்டுக்குச் சென்று தகாத உறவை கைவிடும்படி கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கணேசன், சமையல் அறையிலிருந்த கத்தியால் அத்தை என்றும் பாராமல் குணசுந்தரியைச் சரமாரியாக குத்திக் கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கொளத்தூர் காவல்துறையினர் குணசுந்தரியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகாத உறவைக் கண்டித்ததற்காகச் சொந்த அத்தை என்றும் பாராமல் இளைஞர் கொலை செய்துள்ள சம்பவம் சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.