'மகள்களை' வீடியோ எடுத்து... அம்மாக்களை 'மிரட்டிய' காசி... வெளியான 'பரபரப்பு' தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியது, அவர்களிடம் பணம் பறித்தது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நாகர்கோவிலை சேர்ந்த காசி என்னும் சுஜியை போலீசார் சமீபத்தில் குண்டர் மற்றும் போக்சோ சட்டங்களின் கீழ் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து செல்போன், லேப்டாப் போன்றவற்றையும் போலீசார் கைப்பற்றி அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காசியால் இதுவரை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக காசியின் நண்பன் டேசன் ஜினோ என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதவிர காசியின் மோசடிகளுக்கு உடந்தையாக இருந்த மற்றொரு வெளிநாட்டு நண்பரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தன் வலையில் சிக்கிய பெண்களை வீடியோ எடுத்து அவர்களின் அம்மாக்களையும் காசி மிரட்டிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது மகள்களுடன் நெருங்கிப் பழகும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் காசி எடுத்து வைத்துக் கொள்வார். பின்னர் அந்த ஆபாச படங்களை அவர்களின் தாயாரிடம் காட்டி மிரட்டுவது, பணம் பறிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அதன்படி, நாகர்கோவிலை சேர்ந்த தாய்-மகள் காசியின் வலையில் சிக்கி பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இதுவரை காசி மீது புகார் அளிக்கவில்லை என்றும், பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.
