‘சித்தியுடன் தகாத உறவு’.. கண்டித்த அத்தைக்கு ‘கத்திக்குத்து’.. சென்னையை அதிரவைத்த கொலையின் பகீர் பின்னணி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | May 18, 2020 11:01 AM

கொளத்தூர் அருகே அத்தையை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Chennai youth arrested for stabbing aunty with knife

சென்னை அடுத்த புழல் விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி குணசுந்தரி. இவருடைய தம்பி லோகு. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். குணசுந்தரியின் அண்ணன் மகன் கணேசன். இவரும் அதே பகுதியில் வசித்து வந்துள்ளார். கணேசனின் மனைவி கருத்துவேறுபாடு காரணமாக அவரை பிரிந்து சென்றுவிட்டார்.

இந்த நிலையில் கணேசனுக்கு அதே பகுதியில் வசித்து வரும் சித்தி முறையான லோகுவின் மனைவிக்கும் தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் கடந்த 5 மாதங்களாக தனிமையில் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குணசுந்தரிக்கு தெரியவர, தனது அண்ணன் மகன் கணேசனை பலமுறை கண்டித்துள்ளார்.

சம்பத்தன்று கணேசனின் வீட்டுக்கு சென்ற குணசுந்தரி சித்தியுடனான தகாத உறவை கைவிடும் படி கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணேசன் காய்கறி நறுக்கு கத்தியால் குணசுந்தரியை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். படுகாயமடைந்த குணசுந்தரி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த கணேசனை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.