‘ஒரே நைட்டில் 19 கொலை’.. ‘ஹிட்லர்’ ஸ்டைலை பாலோ பண்ணேன்.. போலீஸை மிரளவைத்த இளைஞர் வாக்குமூலம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்நள்ளிரவு முதியோர் இல்லத்துக்குள் புகுந்த இளைஞர் ஒருவர் 19 ஊனமுற்ற முதியோர்களை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் சதோஷு உமாத்சு (26). இவர் சுகுய் லில்லி கார்டன் என்ற ஊனமுற்றவர்களுக்கான முதியோர் இல்லத்தில் மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். ஊனமுற்றவர்கள் மீதான வெறுப்பு காரணமாக கடந்த 2016 பிப்ரவரி மாதம் தனது வேலைவிட்டு சென்றுள்ளார். இதனை அடுத்து நான்கு மாதங்களுக்கு பின்னர் ஜூலை 26ம் தேதி நள்ளிரவு தான் வேலை பார்த்த முதியோர் இல்லத்துக்குள் யாருக்கும் தெரியாமல் சதோஷு உமாத்சு நுழைந்துள்ளார்.
அப்போது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த முதியோர்களின் கழுத்தை குறி வைத்து கூரிய ஆயுதத்தால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் 19 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். 26 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து போலீசார் வருவதற்குள் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
இதனை அடுத்து விடிந்த பின்னர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தாமாகவே சதோஷு உமாத்சு சரணடைந்தார். அப்போது ‘ஊனமுற்றவர்கள் நாட்டிற்கு பாரம், அவர்கள் உயிருடன் இருப்பது வீண்’ என முணுமுணுத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சதோஷு உமாத்சு முதியோர் இல்லத்தில் இருந்து வேலையை விடும் முன் முக்கிய அரசியல்வாதி ஒருவருக்கு கடிதம் ஒன்று எழுதியிருப்பது போலீசார் விசாரணையில் தெரிவந்துள்ளது.
அதில், ஊனமுற்ற முதியவர்களை கருணைக்கொலை செய்யவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அந்த பணியை தானே செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக சதோஷு உமாத்சுவை கைது செய்த போலீசார், அவரை உளவியல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். இரண்டு வார சிகிச்சைக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட சதோஷு, சுமார் 146 நாள்களுக்கு பின்னர் முதியோர் இல்லத்தில் புகுந்து கொலை செய்துள்ளார்.
விசாரணையில், தான் ஹிட்லரின் பாணியை பின்பற்றியதாகவும், இதை செய்ததில் எந்த வருத்தமும் இல்லை என தெரிவித்துள்ளார். இவர் மீது நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் 19 கொலை மற்றும் 26 கொலை முயற்சி ஆகிய வழக்குகள் நீருபிக்கப்பட்டன. இதனை அடுத்து அவருக்கு தற்போது மரணதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.