'சிதைச்சு' போட்டுட்டு போய்ட்டாங்க... மோட்டார் சைக்கிளில் வந்த 'கள்ளக்காதல்' ஜோடிக்கு... 'மதுரை' அருகே நிகழ்ந்த பயங்கரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | May 18, 2020 03:59 PM

மதுரை மேலூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த கள்ளக்காதல் ஜோடியை வெட்டிக்கொலை செய்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Double Murder in Madurai District, Police Investigate

மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கண்மாய் பக்கத்தில் இளம்பெண்ணும், இளைஞர் ஒருவர் நடுரோட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இளைஞர் பெயர் அன்புநாதன்(27) இளம்பெண் பெயர் ஆயம்மாள்(26) என்றும் தெரியவந்தது. அன்புநாதனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆயம்மாளுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் தங்களுக்கிடையே உள்ள கள்ளக்காதலை கைவிடவில்லை என்பதால், இந்த கொலை நடைபெற்று இருக்கலாம் என போலீசார் தரப்பில் சந்தேகம் எழுந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்பநாய் கொலை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. சம்பவ இடத்தில் கிடந்த அன்புநாதனின் செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். கடைசியாக அவர் செல்போனில் யார்-யாரிடம் பேசியுள்ளார் என விசாரித்து கொலையாளிகளை பிடிக்க போலீசார் தரப்பில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இதற்காக 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.