'மாதவிடாய்' டைம்ல இத செய்யாதீங்க'...'செஞ்சா அடுத்த ஜென்மத்துல நாய் தான்'... கொதித்த நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Feb 19, 2020 04:52 PM

‘மாதவிடாய் காலங்களில் சமைக்கும் பெண்கள், அடுத்த பிறவியில் நாயாகப் பிறப்பார்கள் என,  சுவாமி குருஷ்னஷ்வரப் தாஸ்ஜி பேச்சிற்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

Priest Says Menstruating Women Who Cook are Reborn as Bitches

குஜராத்தின் பூஜ் நகரில் ஸ்ரீ சஹ்ஜானந்த் என்ற பெண்கள் கல்வி நிறுவனம், தற்போது கடும் சர்ச்சையில் சிக்கியது. பூஜ் நகரில் உள்ள இந்த கல்வி நிறுவனத்தில் 1,500 மாணவிகள் படித்து வரும் நிலையில், அங்கிருக்கும் விடுதியில் 60 மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். இந்நிலையில் இங்கு விடுதியில் இருக்கும் மாணவிகள், மாதவிடாய் காலங்களில் பூஜை அறைக்குச் செல்கிறார்கள் என்று புகார் எழுந்தது. இதனால்  60 மாணவிகளின் உள்ளாடைகளைக் கழற்றச் சொல்லி கல்லூரி நிர்வாகம் சோதனை செய்துள்ளது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த கல்லூரியின் முதல்வர் உள்ளிட்ட ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே அந்த கல்லூரியின் மதபோதகர் சுவாமி குருஷ்னஷ்வரப் தாஸ்ஜி பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ''அந்த வீடியோவில், ‘மாதவிடாய் காலங்களில் சமைக்கும் பெண்கள், அடுத்த பிறவியில் நாயாகப் பிறப்பார்கள். மாதவிடாய் காலப் பெண்கள் சமைக்கும் உணவுகளை உண்ணும் ஆண்கள் அடுத்த பிறவியில் மாடாகப் பிறப்பார்கள்’ என்று பேசியுள்ளார்.

குருஷ்னஷ்வரப் தாஸ்ஜியின் பேச்சுக்கு நெட்டிசன்கள் பலரும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது மிகவும் பிற்போக்கு தனமான மற்றும் அருவருக்கத்தக்க பேச்சு என பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

Tags : #MENSTRUATING #BHUJ #GUJARAT #SWAMI KRUSHNASWARUP DASJI #BITCHES